இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் நான்காவது டி-20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி இந்தப்போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணியில் தொடக்க ரோஹித் சர்மா 12 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அவரை தொடர்ந்து கே.எல் ராகுல் 14 ரன்னில் அவுட் ஆக இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. பின்னர் வந்த சூரியக்குமார் யாதவ் நிலைத்து விளையாடினார். அதிரடியாக விளையாடிய யாதவ் 31 பந்தில் அரைசதம் வீளாசி அசத்தினார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் 30 மற்றும் 37 ரன்கள் முறையே அடிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 185-8 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜெசன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பட்லர் 9 ரன்னில் அவுட் ஆக பேஸ்ரோ 25 ரன்னில் அவுட் ஆகினார்.
அதன்பின்னர் வந்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து விளையாடி 46 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. இந்திய அணியில் ஹர்டிக் பாண்டிய மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலைக்கு சென்றது. கடைசி ஓவரில் ஆர்ச்சர் மிரட்ட இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. ஆட்டநாயகனாக சூரியக்குமார் யாதவ். தேர்வு செய்யப்பட்டார்.