ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை டி 20 உலக கோப்பை 2024 தொடர் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது
ஐசிசி, டி20 போட்டிகளின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த உள்ளதாக அறிவித்தது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் முதல் முறையாக டி20 கிரிக்கெட் போட்டியில் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது, கிரிக்கெட் விளையாட்டை அமெரிக்காவில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஐசிசி இந்த முடிவை எடுத்து டி 20 போட்டி நடத்துவதற்கான உரிமையை வழங்கி உள்ளது.
மேலும் அமெரிக்காவும் இந்த தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு தன் தரப்பிலான வேலைகளை துவங்கியது. அதன்படி அமெரிக்காவில் நியூயார்க், பிளோரிடா மற்றும் டாலர்ஸ் போன்ற நகரங்களில் இந்த உலகக்கோப்பை போட்டி நடத்தப்படும் என்றும் அங்கு இருக்கும் மைதானங்களில் உள்கட்டமைப்பை மாற்றி அமைக்கவும் ஐசிசி அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் மேற்கத்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து நடத்தும் டி20 உலக கோப்பை 2024 தொடருக்கான தேதிகளை ஐசிசி அறிவித்துள்ளது, அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பை போட்டியில் எப்பொழுதும் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.