இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இந்தியா அணியில் தொடக்க வீரர்கள் கே.எல் ராகுல் வழக்கம் போல் நான்கு பந்துகளில் டக் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி மட்டும் கடைசி வரை நிலைத்து விளையாடி அரைசதம் வீளாசினார்.
இதனால் இந்திய அணி 156 ரன்கள் சேர்த்த நிலையில் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த டி-20 தொடரில் இந்திய அணியில் நல்ல பாரீமில் இருந்து வருவது கேப்டன் வீராட் கோலி மட்டும் தான். முதல் போட்டியில் டக் அவுட் ஆகிய வீராட் கோலி இரண்டாவது டி-20 போட்டியில் 73 ரன்கள் அடித்து அசத்த மூன்றாவது டி-20 போட்டியிலும் 77 ரன்கள் அடித்தார். இந்நிலையில் இன்று ஐசிசி வெளியிட்டுள்ள டி-20 தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் வீராட் கோலி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் வீரராக ஐந்தாவது முறையாக டாப்-5 இடத்திற்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.