இந்திய அணியின் விக்கெட் கீப்பர் போஸ்ட்டிங்காக 3 பேருக்கு இடையில் அடிதடி..! திறமை இருப்பவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்!

Update: 2021-05-21 15:19 GMT

அனைத்து தரப்பு போட்டிகளுக்கும், இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தான் முதல் தேர்வாக உள்ளார். இதற்கடுத்த நிலையில்தான் சஹா உள்ளார். ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருவதால், அவர்தான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சஹா கூறியுள்ளார்.

இது குறித்து பேட்டியளித்துள்ள சஹா, 

பல முக்கிய ஆட்டங்களில் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி சில போட்டிகளில் அவரது திறமை வெளிப்பட்டது.

அதனால் இங்கிலாந்தில் நடக்கவுள்ள போட்டியில் விக்கெட் கீப்பராக அவர் தான் முதல் தேர்வாக இருக்கவேண்டும். எனக்கான வாய்ப்பு வரும் வரையில் நான் காத்திருக்கிறேன். நிச்சயம் என்னுடைய திறமையை நிரூபிப்பேன். அந்த ஒரு வாய்ப்புக்காகத் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்வேன்.

கே.எஸ். பரத், எனக்கு பதிலாக மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது எனக்கு கரோனா பாதிப்பு இல்லை. அப்போதும் மாற்று வீரராக பரத் அணியில் இருந்தார்.

இப்போது எனக்கு கரோனா பாதிப்பு வந்ததால் அவரை மாற்று வீரர் எனச் சொல்கிறார்கள். கரோனா சூழல் காரணமாக பரத்தை 3-வது விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்துள்ளார்கள் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Tags:    

Similar News