நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்தபோட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் 26 ரன்னிலும் நிக்கோலஸ் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். அதை தொடர்ந்து களம் இறங்கிய கான்வே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெய்லர் 7 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் வந்த மிட்செலும் அதிரடியாக விளையாட நியூசிலாந்து அணி வலுவான ஸ்கோரரை எட்டியது.
கான்வே 126 ரன்களும் மிட்செல் 100 ரன்களும் அடித்த நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 318 ரன்கள் சேர்த்தது. அடுத்து விளையாடி பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியில் ஹென்றி மற்றும் நீஷம் பந்து வீச்சில் 154 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது.