விராட் தரவரிசையில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டார்: வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவாரா?

Update: 2022-01-08 16:38 GMT

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பேட்டிங் பிரிவின் மிகப் பெரிய தூணாக விளங்குபவர் விராட் கோலி. தன் பழைய ஆட்டத்தை மீட்கும் நேரம் வந்துவிட்டதா?


தனது ஆக்ரோஷமான விருவிருப்பான பேட்டிங் மூலம்  உலக கிரிக்கெட்டை தன்வசப்படுத்தி "கிங் கோலி"யாக வலம் வருபவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. தனது கிரிக்கெட் கேரியரில் சதங்களை சராமாரியாக  விளாசித் தள்ளியவர், இரண்டு ஆண்டுகளாக ஒரு சதத்தை கூட எட்ட முடியாமல் திணறி வருகிறார். இது இந்திய ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளியுள்ளது. 


இந்நிலையில் தற்பொழுது அவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளுக்கான  கேப்டன் பதவியில் இருந்து விலகி, டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில்  மட்டும் நீடிப்பதால் அவரது பேட்டிங் திறன் எழுச்சி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கையில், தற்பொழுது அவர் ஐ.சி.சி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஏழாம் இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


அடுத்து வரக்கூடிய, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் தன் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Image : NDTV Sports

Tags:    

Similar News