எப்போப்பா பும்ரா களத்தில் இறங்குவார்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு BCCI பதில் என்ன?

Update: 2023-07-29 03:24 GMT
எப்போப்பா பும்ரா களத்தில் இறங்குவார்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு BCCI பதில் என்ன?

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். இந்திய அணியின் ஒரு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்த பும்ராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக அவர் விரைவில் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் வேண்டிக் கொண்டு இருந்தார்கள். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.


அதன் பின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், 6 மாதமாக ஓய்வில் இருந்தார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வந்த இவர் ஒரு நாளில் ஒன்பது ஓவர்கள் வரை வீசுவதற்கு அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் மேலும் இவர் முழுமையாக குணமடைந்து மருத்துவ ஆய்விற்கட்பட்ட பிறகுதான், இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தகவல்கள் வெளியாக இருக்கிறது. 


தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக பும்ரா அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ப பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனியர் வீரர்கள் பங்கேற்காத நிலையில், காயத்தில் இருந்து கம்பேக் கொடுக்க உள்ள வீரர்களையும் இளம் வீரர்களோடு சேர்த்து அனுப்ப தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News