கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த இந்திய வீரர்கள் - ஆர்வம் காட்டிய வெளிநாட்டினர் - IPL கேன்சலாக இப்படியொரு காரணம் இருக்கா?
இந்த ஆண்டு IPL நடப்பது சந்தேகம்தான் எனத்தெரிகிறது. பல்வேறு அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
போட்டிகளுக்கு முன்னர், வீரர்கள், கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து அணி நிர்வாகமும், போட்டிக்கு முன்னர், தங்கள் வீரர்களையும், அணி உறுப்பினர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால், பல வீர்ரகள் இதற்கு சம்மதிக்கவில்லை. போதுமான விழிப்புணர்வு இல்லாததால் வீரர்கள் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என அணிகளின் நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் காய்ச்சல் ஏற்படும் என்று வீரர்கள் அஞ்சினர் என்றும் அறிக்கையில் கூறப்படுட்டுள்ளது. ஆகையால் யாருக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படவில்லை.
வெளிநாட்டு வீரர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் சட்ட காரணங்களால் இது சாத்தியமில்லாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி வரையில் இரு அணி உரிமையாளர்களால் மட்டுமே, தங்கள் அணி வீரர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதிக்க வைக்க முடிந்தது. மற்ற அணி நிர்வாகங்களால் அது முடியவில்லை.
தற்போது பல அணிகளில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவே இந்த வருட போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக BCCI உடனடியாக அறிவித்தது.