சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். இவர் விலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கடந்த வாரம் நடந்த வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களின் 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில், ரயில்வே விதிகளின் படி ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை ராய்ப்பூர் ரயில்வே கோட்டம் செய்தது.
மேலும், பாட்டியின் பராமரிப்பில் தற்போது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் வளர்ந்து வரும் நிலையில், தந்தையின் பணி வழங்கப்பட்டுள்ளது. கைக்குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவு செய்யப்பட்டு பணி நியமனத்தை இந்தியன் ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் அவர் பணியில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது. தன்னுடைய பெற்றோரை இழந்தாலும், தனது தந்தை பணியாற்றிய அதே ரயில்வே நிர்வாகத்தில் குழந்தை வேலை செய்ய உள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Source, Image Courtesy: Maalaimalar