ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா தனது நூறாவது பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிக பெரிய பிரபலமான விளையாட்டாக கருதப்படுகின்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் 19 ஆவது விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சு நகரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. மேலும் 12,400 வீரர் வீராங்கனைகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா தரப்பில் இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என கிட்டத்தட்ட 95 பதக்கங்களை இந்தியா வென்று தனக்கான பதக்க பட்டியலில் நாலாவது இடத்தை பெற்றுள்ளது. தினந்தோறும் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒவ்வொரு போட்டியிலும் பதக்கங்களை குவித்து வரும் செய்திகள் தினந்தோறும் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற பதக்க பட்டியலை இந்த ஆண்டு முறியடித்து விட்டது என்ற செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை வெல்லும் முனைப்பிலும் ஆண்கள் கிரிக்கெட், கபடி போன்ற இன்னும் ஒன்பது போட்டிகளில் பதக்கத்தை உறுதி செய்து, இந்தியா 100 பதக்கங்களை தாண்டி சதம் அடிக்க உள்ளது.
Source - Dinamalar