கரூர்: 'நீரஜ்' பெயர் இருப்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம் !

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.;

Update: 2021-08-11 11:17 GMT
கரூர்: நீரஜ் பெயர் இருப்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம் !

நீரஜ் என்ற பெயர் இருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக போடப்படும் என்று கரூரில் அறிவிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர், சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நீரஜ் என்ற பெயர் இருப்பவர்களுக்கு தங்கள் பெட்ரோல் பங்கிற்கு வரும்போது, இலவசமாக 2 லிட்டர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக ஆதார் அட்டை கொண்டு வந்தால் போதுமானது என கூறப்பட்டுள்ளது.

Source: NEWS 7

Image Courtesy: Mint

https://news7tamil.live/2-liters-of-petrol-is-free-for-those-named-neeraj.html

Tags:    

Similar News