20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: பும்ரா இடம் பெறவில்லையா?
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பும்ரா ஆட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதுகு பகுதியில் உள்ள எலும்பின் லேசாபும்ரான முடிவு ஏற்பட்டது அடித்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். அவரது காயத்திற்கு சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்பதால் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பும்ரா பங்கேற்க முடியாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தனர். ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ஆகியோர் உலகக்கோப்பை அணியில் இருந்து பும்ரா இன்னும் விலகவில்லை.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவ நிபுணர்களின் அறிக்கை கிடைத்ததும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பை காண இந்திய அணியில் இருந்து பும்ரா விலக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
காயம் குடமடைய அதிக நாட்கள் நீடிக்கும் என்பதால் உலக கோப்பை போட்டியில் அவரால் விளையாட முடியாது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சிறப்பு மருத்துவர்கள் உடன் விரிவான கலந்த ஆலோசிக்க பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பும்ரா ஆட முடியாமல் போகுது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவருக்கு பதிலாக 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் யார் என்பதும் ஒரு சில நாட்களில் தெரியவரும்.
Input & Image courtesy: News