உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரிய இழப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா ஆகியோர் இல்லாதது பெரிய இழப்பு என்று முன்னாள் பயிற்சியாளர் பேட்டி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் கிரிக்கெட் மைதான தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் காயம் காரணமாக வெகு பந்துவீச்சாளர் பும்ரா, ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை.
இது நிச்சயம் இந்தியாவிற்கு பெரிய இழப்புதான். அதேசமயம் இவர்கள் இல்லாதது, அணியின் புதிய சாம்பியன் வீரர்களை அடையாளம் காண்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இப்பொழுது நாம் நிறைய கிரிக்கெட்டை விளையாடுகிறோம். அதனால் வீரர்கள் காயமடைகிறார்கள் காயும் விஷயத்தில் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பும்ராவின் காயம் துரதிஷ்டவசமானது.
ஆனால் அவருக்கு பதிலாக வேறொரு வீரர் சிறப்பாக செயல்பட வாய்ப்பாக இது அமையும். நம்மிடம் போதுமான வலுவுடன் சிறந்த அணி உள்ளது. அரை இறுதிக்கு முன்னேறிவிட்டால், அதன் பிறகு யாருடைய தொடராகவும் இது அமையலாம். எனவே சிறந்த தொடக்கத்தை எட்ட கடுமையாக முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு அநேகமான கோப்பைகளை வெல்வதற்கு போதுமான பலம் வந்துவிடும் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News