ஐபிஎல் 2020 ல் முதல் முறையாக தொடர்ந்து இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றது சென்னை அணி.!
ஐபிஎல் 2020 ல் முதல் முறையாக தொடர்ந்து இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றது சென்னை அணி.!
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் கில் 26 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொதப்பினர்.
நித்திஷ் ராணா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் வீளாசினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க கொல்கத்தா அணி பெரிய இலக்கை எட்டமுடியாத நிலை ஏற்பட்டது. எனினும் ராணா 87 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் லுங்கி இங்கிடி இரண்டு விக்கெட்களை வீழ்த்த சென்னை அணி சிறப்பான பந்து வீச்சை செய்தது.
பின்னர் விளையாடிய சென்னை அணியில் வாட்சன் இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட நிலையில் மோசான ஆட்டத்தை வெளிபடுத்தி அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரர் ருத்ராஜ் கெக்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து இரண்டு போட்டிகள் அரைசதம் விளாசிய கெக்வாட் 72 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த ராய்டு அதிரடியாக விளையாட சென்னை அணி வெற்றி நோக்கி சென்ற நிலையில் ராய்டு தோனி அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க சென்னை அணி தடுமாறியது. கடைசி ஓவரில் ஜடேஜா அதிரடி காட்ட சென்னை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.