21 ஆண்டுகள் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொண்ட வங்கதேசம் அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

Update: 2022-01-05 03:34 GMT

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்காளதேசம் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை என்ற வரலாறு உண்டு.

இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 328 ரன்களை எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி 4வது நாளான நேற்று 176.2 ஓவர்களில் 458 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அதற்கு அடுத்து 130 ரன்களுடன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 74.4 ஓவர்களில் 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனை தொடர்ந்து 40 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டம் இழந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதனை தொலைக்காட்சிகளில் கண்டுகளித்த வங்கதேச ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 21 ஆண்டுகளாக வெற்றிபெறாத நிலையில் தற்போது வங்கதேசம் பெற்ற வெற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: ICC Cricket

Tags:    

Similar News