ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

Update: 2022-06-05 02:45 GMT

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பாக முதலாவது 5 பேர் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் நேற்று (ஜூன் 4) தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

அதற்கு அடுத்த நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை டிரா செய்தது. அதே போன்று பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-4 என்கின்ற கோல் கணக்கில் உருகுவேயிடம், 2வது ஆட்டத்தில் 1-3 என்கின்ற கோல் கணக்கிலும் போலந்திடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News