50 வருட இந்தியா- கொரியா உறவு: அகில இந்திய டேக்வாண்டோ சாம்பியன் போட்டி!
கொரியா கலச்சார மையம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து டேக்வாண்டோ சாம்பியன் போட்டியை நடத்துகிறது.
புதுதில்லியில் 3 நாட்கள் நடைபெறவுள்ள அகில இந்திய டேக்வாண்டோ சாம்பியன் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சனிக்கிழமை இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் உள்ள கொரிய கலச்சார மையம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து அகில இந்திய டேக்வாண்டோ சாம்பியன் போட்டியை நடத்துகிறது. கொரிய தேசிய விளையாட்டுப் பல்கலைகழகம் இப்போட்டியை இணைந்து நடத்தவுள்ளது.
இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இப்போட்டி நடத்தப்படுகிறது. புதுதில்லி இந்திரகாந்தி மைதானத்தில் உள்ள கே.டி. ஜாதவ் மல்யுத்த உள் அரங்கில் பிப்ரவரி 24 தேதி முதல் 26ம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளது. தொடக்க விழா பிப்ரவரி 24ம் தேதி காலை 10.30க்கு நடைபெறவுள்ளது.
இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்தியாவுக்கான கொரிய தூதர் ஜாங் ஜே போக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது கொரிய நடனம், டேக்வாண்டோ போட்டிகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவைத் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது.
Input & Image courtesy:News