5வது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!

Update: 2022-07-05 02:17 GMT

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்தது. அதே போன்று இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவின்படி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், இன்று (ஜூலை 4) நடைபெற்ற 4வது நாள் ஆட்டத்தில் புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் கடந்த 57 ரன்களை பண்ட் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பும்ரா 7 ரன்னுடன் வெளியேற இந்திய அணி 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற 378 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News