கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 84 ரன்னில் சுருட்டிய பெங்களுரு அணி.!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 84 ரன்னில் சுருட்டிய பெங்களுரு அணி.!

Update: 2020-10-22 08:29 GMT

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் வெற்றி தோல்வியை பொருத்தே சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், ஐத்ராபாத் ஆகிய அணிகளின் பிளே ஆப் வாய்ப்புகள் அமையும் என்பதால் கொல்கத்தா அணி வெற்றி பெறுவது அந்த அணிக்கு மிகவும் முக்கியமானது.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே பெரிய சரிவை சந்தித்தது. ராகுல் திரிபாதி , சுக்மன் கில் இருவரும் 1 ரன்னில் வெளியேற அடுத்து வந்த நித்திஸ் ராணா ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். இது கொல்கத்தா அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. அடுத்து வந்த டாம் பண்டன் 10 ரன்கள் அடிக்க தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து கொல்கத்தா அணி விக்கெட்களை இழந்து வந்தது. கேப்டன் மோர்கன் மட்டும் 30 ரன்கள் சேர்த்தார். பெர்குசன் 19 ரன்கள் அடிக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 84/4 ரன்கள் மட்டுமே அடித்தது.

அதன் பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் தேவ்தேத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். படிக்கல் 25 ரன்னிலும் பின்ச் 16 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த குர்கித் மான் 21 ரன்களும் கோலி 18 ரன்கள் அடித்து 13 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது பெங்களுரு அணி.

Similar News