"டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் சரிவர மாட்டார்" - நடராஜனை சீண்டும் டேவிட் வார்னர்!
"டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் சரிவர மாட்டார்" - நடராஜனை சீண்டும் டேவிட் வார்னர்!
வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய டி-20 அணியில் இடம்பெற்ற நடராஜன் தற்போது உமேஷ் யாதவிற்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றுள்ளார். வெகு விரைவில் மூன்று விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து விட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்தாலும், முன்னாள் வீரர்கள் பலர் நடராஜனுக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நடராஜன் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், நடராஜனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும் என்று தான் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டேவிட் வார்னர் பேசுகையில், "மிகச்சிறந்த வீரராக உருவெடுப்பதற்கு தேவையான அனைத்து திறமைகளும் நடராஜனிடம் உள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகள் அதிக சவால் நிறைந்தது, நடராஜனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் கருதவில்லை. நடராஜனின் முன்னேற்றம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நெட் பவுலராக ஆஸ்திரேலியா வந்த நடராஜன் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளதை பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.