முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்கள் இவர்கள் தான் அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா.!

முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்கள் இவர்கள் தான் அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா.!

Update: 2020-12-14 08:33 GMT

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்க உள்ளது.

இந்த போட்டியை வெற்றிகரமாக துவங்க இரு அணிகளுமே மும்முரம் காட்டும் என்று தெரிகிறது. மேலும் தற்போது இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இந்திய அணியில் துவக்க ஜோடி  யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையை உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து பேசியுள்ளார். 


ஆகாஷ் சோப்ரா கூறுகையில்: என்னை பொறுத்தவரை இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரே களமிறக்க வேண்டும். ஏனெனில் எப்பொழுதும் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் டெஸ்ட் அணியின் துவக்க வீரர்கள் பட்டியலில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி முன்னர் அவர்கள் விளையாடிய விதமும் அவர்களுக்கு வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இருப்பினும் அவர் மிடில் ஆர்டரில் களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டவர்.


எனவே அவரை துவக்க வீரருக்கு பதிலாக கோலியின் இடத்தில் இறக்கலாம். பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்வி ஷா 29 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் அடித்தார். என்னை பொருத்தவரை அவரே அகர்வாலுடன் களமிறங்க வேண்டும். அதுவே இந்திய அணிக்கு பலமாக அமையும் கோலி சென்றபின்னர் 3-வது இடத்தில் கில் களம் இறங்கினால் அது சிறப்பாக இருக்கும் என்றார்.

Similar News