இந்திய vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு வீரர் விலகல் மாற்று வீரரை அறிவித்தது அணி நீர்வாகம்.!

இந்திய vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு வீரர் விலகல் மாற்று வீரரை அறிவித்தது அணி நீர்வாகம்.!

Update: 2020-12-14 13:14 GMT

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்க உள்ளது. இந்த போட்டியை வெற்றிகரமாக துவங்க இரு அணிகளுமே மும்முரம் காட்டும் என்று தெரிகிறது. மேலும் தற்போது இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது. 


இந்த தொடரை வெல்ல ஆஸ்திரேலியா அணி முழுவிச்சில் முயற்சி எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்  பங்கேற்காதது ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய பின்னடைவாக கருத்தப்படுகின்றது. அவரை தொடர்ந்து மற்றொரு ஆஸ்திரேலியா வீரர் தொடரில் இருந்தே விலகி உள்ளார். 


ஆஸ்திரேலியா அணியின் வேகபந்து வீச்சாளர் அப்பெட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. டி-20 போட்டி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக அப்பெட் களம் இறங்கிய நிலையில் டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றிருந்தார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியா டி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஹென்றிக்வுஸ் அணியில் இணைந்துள்ளார். 

Similar News