ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு அதிர்ச்சி: அடிலெய்டு டெஸ்டில் ஹேசில்வுட் விளையாடவில்லை!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றுள்ளது.;
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே 2வது டெஸ்ட் போட்டி (டிசம்பர் 16) அடிலெய்டில் தொடங்க உள்ளது. இந்த போட்டி பகல், இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4வது நாள் ஆட்டத்தின்போது அவர் 6 ஓவர்கள் மட்டுமே வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரிஸ்பேன் டெஸ்டில் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source: Maalaimalar
Image Courtesy: News 18