ஆசஷ் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆசஷ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெல்வது இரண்டு நாடுகளுக்கும் கவுரவ பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் இரண்டு நாட்டு ரசிகர்களிடமும் தொடருக்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Update: 2021-10-10 09:01 GMT

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆசஷ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெல்வது இரண்டு நாடுகளுக்கும் கவுரவ பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் இரண்டு நாட்டு ரசிகர்களிடமும் தொடருக்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் ஆசஷ் தொடர் வருகின்ற டிசம்பர் மாதம் 8ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி தேர்வு பற்றி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆசஷ் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியில் 17 முதல் 18 வீரர்கள் இடம்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News