திறமையான பந்துவீச்சாளர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டம்: தொடங்கி வைத்த அஸ்வின்!
திறமையான பந்துவீச்சாளர்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டம்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து சிறந்த மிக வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து சர்வதேச வீரர்களாக உருவெடுக்க வைக்க புதிய திட்டம் தற்பொழுது உருவெடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் முதல் தரம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய கமிட்டி அமைத்து இதன் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்த முதல் சிறப்பு தேர்வு முகாம் நடத்த திட்டத்தில் இருக்கிறது. மேலும் இளம் சிறந்த வீரர்களை கண்டறிந்து அவர்கள் திறமைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த திட்டத்தை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக அவர் கூறுகையில், வேக பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணுவதற்காக சிறப்பு முகம் 13 மாவட்டம் மையங்களில் நடைபெறுகிறது. 18 முதல் 24 வயதுக்குட்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏதாவது ஒரு வயது பிரிவில் ஒருங்கிணைந்த மாவட்ட அணிகளுக்காக விளையாடி இருக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சென்னைக்கு தவிர தேனி, திருப்பூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் செட்டி லைட் மையங்கள் உருவாக்கப்படுகிறது. இதில் தேனி திருப்பூர் ஆகிய அதிக திறன் கொண்ட செட்டிலைட் மையங்களாக இருக்கும்.
ஏற்கனவே நத்தம், நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் மையங்களில் உள்ள வசதிகள் மற்றும் விழுப்புரம் மையத்தில் உள்ள வசதியும் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழக அணி கடைசியாக 1988 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையை கைப்பற்றியதும் அதன் பிறகு இதுவரை கோப்பையை வெல்வது இல்லை என்று நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்தக் குறையை நாம் போக்க வேண்டும் நானும் இந்த திட்டத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Indian Express