தேவையில்லாமல் இந்திய வீரர்களை குறை கூறும் நபர்கள் - அஸ்வின் தெரிவித்த பதில்!

சச்சின் அவர்களாலே முடியாமல் போனது எப்படி மற்ற வீரர்களால் அத்தகைய சூழ்நிலையை எப்படி சமாளிக்க முடியும் என்று அஸ்வின் பதில்.

Update: 2023-01-30 02:29 GMT

ஏதேனும் ஒரு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வெற்றிபெறவில்லை என்றால் அவர்கள் மீது ஒரு விதமான அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களாக இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாத நெருக்கடி ஏற்படுத்துவதாக பல்வேறு ஊடகங்கள் தெரிவிப்பதாகவும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசி உள்ள அஸ்வின் இந்திய அணி 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ICC கோப்பையை வாங்கவில்லை.


இதன் காரணமாக இந்த ஒரு செய்தியை ஊடகங்கள் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை தன்னுடைய ஆறாவது உலக கோப்பையில் தான் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார். இப்படி இருக்கும் ஒரு சூழ்நிலையில் எப்படி இந்திய அணி வீரர்களால் ஜாம்பவானுக்கு ஏற்பட்ட நிலைதான் தற்போது இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது தொடர்ச்சியாக ஏற்படும் அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்.


விராட் கோலி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையும், 2013 சாம்பியன்ஸ் கோப்பையும் வென்றிருக்கிறார். ஏன் அழுத்தம்? ரோகித் சர்மாவும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறார். எனவே இரண்டு வீரர்களுக்கும் கொஞ்சம் சுவாசிக்க இடம் கொடுங்கள். தொடர்ச்சியாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக T20 தொடர்களில் தொடங்கி ஐ.பி.எல் போட்டி வரை பல்வேறு தொடர்களில் அவர்கள் நெருக்கடியான கட்டங்களில் விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு இப்படி நெருக்கம் கொடுக்கக் கூடாது என்று அவர் கூறுகிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News