ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
நேற்று 27 ஆகஸ்டில் தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடர் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. எனவே இதில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தை ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி கொண்டது. அந்த வகையில் இன்று இந்திய -பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. யார் இந்த போட்டியில் முதலில் ஜெயிப்பார்கள்? என்று ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இன்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய பாகிஸ்தான் இந்திய பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ளது. எல்லை தாண்டி நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. ICC உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்திய பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதனால் தற்போது கூடுதல் எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. நடப்புச் சாம்பியன் ஆன இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இன்று களம் இறங்குகிறது.
Input & Image courtesy: News 7