ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் விலகல் - இந்தியாவுக்கு கிடைத்த சான்ஸ்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் விலகல் காரணமாக இந்தியாவுக்கு கிடைத்த சரியான சான்ஸ்.

Update: 2022-08-21 14:45 GMT

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிகமாக இருந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் வரும் 27ம் தேதி இந்த தொடர் துபாயில் நடக்க இருக்கின்றது இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 28ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். 


T20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் பலமே அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தான். T10 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றத்தற்கு, முக்கிய காரணம் பாகிஸ்தானை சேர்ந்த ஷாகின் ஷா அப்ரிடி தான். இவர் தனது இடது கை வேகப்பந்து வீச்சில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆட்டமிழக்கச் செய்தார் இவரை எதிர்கொள்வதே இந்திய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியாக இருந்து வந்தது. பாகிஸ்தானுக்காக கடந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்,  


இத்தகைய ஒரு சூழலில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இனி ஆசிய உலககோப்பை தொடரில் ஆட மாட்டார் என்பது துரதிர்ஷ்டவசமான விஷயம். ஆனால் இந்தியாவிற்கு தற்போது இது ஒரு நல்ல சான்ஸ் ஆகவும் பார்க்கப்படுகிறது. 

Input & Image courtesy:News

Tags:    

Similar News