ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்தியா பாகிஸ்தானில் விளையாட உள்ளதா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் நாட்டில் விளையாட உள்ளதா?

Update: 2023-06-12 02:20 GMT

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தக்கூடாது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. முதலில் இதற்கு ஒப்புக்கொண்ட இந்தியா ஒட்டுமொத்த தொடரையும் வேறு நாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று வலியுறுத்தியது. ஆனால் அவற்றில் ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்திய பாகிஸ்தான் விளையாட்டை மட்டும் வேறு ஒரு நாட்டில் வைத்துக் கொள்ளலாம். மற்ற விளையாட்டுகளை பாகிஸ்தானிலேயே ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியிருந்தது.


கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தாங்கள் பங்கேற்க இந்தியா வரமாட்டோம் என்றும் அப்படி வந்தாலும் அகமதாபாத்தில் எந்த ஒரு போட்டிகளையும் நடத்தக்கூடாது என்றும் பாகிஸ்தான் போர் கொடி தூக்கியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் வந்து ஒரு விளையாட்டுப் போட்டி. உலக நாடுகள் இந்தியாவிற்கு வருகை தருவது நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


இதனால் உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பை பைனலை நடத்த வேண்டும் என்ற ஆசைக்கு ஆபத்து வந்தது. இதனால் வேறு வழி இன்றி தற்போது பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்து இருக்கிறது. இதனை அடுத்து ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.அதன்படி இந்தியாவும் பாகிஸ்தானும் அகமதாபாத்தில் விளையாட உள்ளன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News