பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வது குறித்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் - அனுராக் தாக்கூர் திட்டவட்டம்

பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வது குறித்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் பேட்டி.

Update: 2022-10-21 12:47 GMT

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்பதால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இவருடைய இந்த பதிவு காரணமாக கொந்தளித்து போன பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜெய்ஷா யாருடனும் கடந்த ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


இப்படி போனால் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் போட்டி உலக கோப்பைக்கு பாகிஸ்தான் அணி வருவது சிக்கல்கள் உருவாகும் என்று எச்சரித்தது. அத்துடன் அடுத்த மாதம் மெல்போர்னியின் நடக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் இந்த பிரச்சினையை கிளப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகளில், இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்ற அனைத்து அணிகளும் வரவேற்கிறோம்.


பாகிஸ்தானும் பலமுறை இந்தியாவிற்கு வந்து விளையாடி உள்ளது. மற்றவர்கள் சொல்வதை கேட்கும் நடக்கும் நிலைமையில் இந்தியா இல்லை. அதற்காக காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எல்லா பணிகளுக்கும் எல்லா அணிகளும் இந்தியா வந்து விளையாடும் என்று எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கும். ஒட்டுமொத்தத்தில் வீரர்களின் பாதுகாப்பை முக்கியமானது. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி அங்கு செல்வதற்கு வாய்ப்பு குறைவு தான் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News