ஆசியக் கோப்பை கிரிக்கெட்: சூர்ய குமார் பேட்டிங்கை புகழ்ந்த விராட் கோலி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் வீழ்த்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா இரண்டு விக்கெட் 192 ரன்கள் குவித்தது. சூரியகுமார் யாதவ் 62 ரன்கள், 26 பந்து, 6 பவுண்டரி, ஆறு சிக்ஸர் எடுத்து இந்திய ரசிகர்களின் மனதில் பெரும் இடத்தைப் பிடித்தார். விராட் கோலி 59 ரன்கள், 44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் ஆகியோர் அரை சதம் விலாசினார்கள். இதில் சூரியகுமார் கடைசி ஓவரில் 4 மிகவும் பிரம்மாண்டமான சிக்ஸர்களை அடித்து மெய்சிலிர்க்க வைத்தார்.
இன்னிங்ஸ் முடிந்ததும் பெவிலியன் நோக்கி திரும்பும் போது விராட் கோலி நெஞ்சில் கை வைத்து சிரம் தாழ்த்தி சூரிய குமாரை மரியாதை செய்தார். பின்னர் அவரை தனியாக அழைத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். உலகில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோலி தனது ஜூனியர் வீரரை பார்த்து இப்படி தலை வணங்கிய வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து சூரியகுமார் யாதவ் கூறுகையில், "கோலியின் செயல் என்னை நிகழ வைத்துவிட்டது. இதற்கு முன்பு இதுபோன்று அனுபவத்தை நான் ஒருபோதும் கண்டது கிடையாது" என்றார். வெற்றிக்கு பிறகு விராட் கோலியின் சூரியகுமார் யாதவும், மைதானத்தில் சிறிது நேரம் அமர்ந்து ஜாலியாக உரையாடினார்கள். இதுபோன்று தொடர்ந்து விளையாடுபட்சத்தில், உலகின் எந்த அணிக்கும் எதிராகவும் ஆட்டத்தின் போக்கை அவரால் மாற்ற முடியும் என்று நம்புவதாக விராட் கோலி கூறினார்.
Input & Image courtesy: News