ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தான் செல்வார்களா இந்திய கிரிக்கெட் வீரர்கள்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் குறித்து இந்திய வீரர்கள் ஐபிஎல் இறுதி ஆட்டத்தின் போது முக்கிய ஆலோசனை.

Update: 2023-05-27 14:54 GMT

இந்தியாவில் தற்போது பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐபிஎல் போட்டி ஆனது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆசிய உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. குறிப்பாக 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் உரிமத்தை தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்று இருக்கிறது. இந்த போட்டியானது செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட கூடாது. அதற்கு பதிலாக இந்த ஒரு போட்டியை பொதுவான இடத்தில் மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிரிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.


இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன் அப்படி என்றால் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க நாங்கள் எந்த தயக்கமும் காட்ட மாட்டோம் என்று எச்சரிக்கையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்தியா சம்பந்தப்பட்ட நான்கு ஆட்டங்களை மட்டுமே பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உட்பட மற்ற ஆட்டங்களில் வேற நாட்டில் வைக்க பாகிஸ்தான் யோசனை தெரிவித்தது.


ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த ஒரு நிரந்தர முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பிறகு அதாவது இறுதி ஆட்டத்தின் போது இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானும் இந்தியாவும் இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மூன்று முறை மோத வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே அந்த ஆட்டங்களை பொதுவான இடங்களில் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News