ஆசிய கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் விலகல்: காரணம் என்ன!

ஆசிய கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் விலகினார்.

Update: 2022-09-04 02:53 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சுழற்பந்து வீசும் ஆல் ரவுண்டராக அரவிந்த ஜடேஜா பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது லீக்க ஆட்டத்தில் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் அடுத்த ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி அவர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த நிலைமையில் வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா ஆசிய கிரிக்கெட் போட்டியில் இருந்து மீதி இருக்கும் ஆட்டங்களில் விலகி இருக்கிறார்.


மேலும் இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா அவர்கள் விலகி இருப்பது இந்திய ரசிகர் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வலது முழங்காலில் ஏற்பட்ட காயும் காரணமாக ரவீந்திர ஜடேஜா ஆசிய கிரிக்கெட் போட்டியில் இருந்து தற்சமயம் விளக்கியுள்ளார். தற்போது அவரை கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த போட்டியில் அவருக்கு மாற்று வீரராக அக்சர் பட்டேலை தேர்வு செய்ய கமிட்டி ஒத்துக்கொண்டு உள்ளது.


ஏற்கனவே அணியில் மாற்றுவீரர் பட்டியலில் இருந்த அக்சர் பட்டேயில் துபாயில் உள்ள அணியினருடன் விரைவில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் விலக முடிவு, இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகும். அவரது காயத்தின் தன்மை மற்றும் குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும்? என்பது குறித்து எந்த செய்தியும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

Input & Image courtesy:Sport News

Tags:    

Similar News