ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் வேண்டும் - ஜெய்ஷாவின் கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் ஜெய் ஷாவின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்.

Update: 2022-10-21 06:25 GMT

ஆசிய கோப்பை போட்டியை மாற்றுவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஆசிய கவுன் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு 2023 செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எல்லை பிரச்சினையால் இருநாட்டு உறவில் நிலவும் விரிசல் காரணமாக 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவது இல்லை.


அதனால் ஆசிய கோப்பை போட்டி அங்கிருந்து மாற்றப்பட்டு பொதுவான ஒரு இடத்திற்கு நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்மான ஜெய்ஷா நேற்று முன்தினம் அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ந்து போன பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிக்கலாமா? என்று யோசித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவிக்கவும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிரிய கிரிக்கெட் போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றுவது குறித்து ஜெய்ஷாவின் அறிவிப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது.


ஏனெனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமும் அல்லது போட்டி நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ எந்த எதுவும் ஆலோசிக்காமல் அவற்றின் நீண்ட கால விளைவுகள் தாக்கங்கள் குறித்து எந்தவித சிந்தனையும் இன்றி தன்னிச்சையாக இவ்வாறு கூறியிருக்கிறார். அவரது தலைமையில் நடத்த ICC கூட்டத்தின் போது உறுப்பினர்கள் பெரும்பாரியாக ஆதரவுடன் ஆசிய கோப்பை போட்டி நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தான் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஆசிரியர் போக்கும் கோப்பை போட்டியை வேறு இடத்தில் மாற்றுவதாக சொல்வது. ஒருதலை பற்ற முடிவு என்பதால் தெளிக்கிறது. எதற்காக 1983 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டதோ? அந்த கோட்பாடு மற்றும் அதன் உத்வேகத்திற்கு முரண் ஆனது. ICC தலைவரின் அறிக்கை குறித்து இன்று வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாக்கி தெளிவான விளக்கத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெறவில்லை. எனவே முக்கியமான இந்த விஷயம் குறித்து விவாதிக்க ஐசிசியின் அவசர கூட்டம் கூட்டுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News