இலங்கையில் வெற்றிக்கு உத்வேகம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை வெற்றிக்கு உத்வேகம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.

Update: 2022-09-14 01:27 GMT

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானில் வென்றது. ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இலங்கை இந்த ஆட்டத்தில் ராஜபக்சேவின் அரை சதத்தின் உதவியுடன் இலங்கை நிர்ணயித்த 121 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 147 ரன்னி ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. வெற்றிக்கு பிறகு இலங்கை கேப்டன் தகன் ஷனகா கூறுகையில், துபாய் மைதானத்தில் முதல் முதலில் பேக் செய்தபோது வெற்றி பெறுவது கடினம் என்பதை அறிவோம். ஆனால் முதலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2021 ஆம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் முதல் பேட் செய்து வெற்றி கண்டது தான் நினைவுக்கு வந்தது.


அது எனக்குள் உத்வேகம் தந்தது. அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் நன்கு தெரியும் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தது தான் திருப்புமுனை. ஏனெனில் 160 ரன்கள் இருக்கும்பொழுது இலக்கை விரட்டி பிடித்து விடலாம் என்று எண்ணம் எப்பொழுதும் இருக்கும். ஆனால் 170 ரன்கள் எட்டியதும் அது மனதளவில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெற்றி ஒட்டுமொத்தமான இலங்கை மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.


71 ரன்கள் விலாசி ஆட்டநாயகன் விருது பெற்ற இலங்கை வீரர் ராஜபக்சே கூறுகையில், "20 ஆண்டுகளுக்கு முன் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய ஒரு அணியாக இலங்கையை திகழ்ந்தது. அதுபோன்று ஒரு அணியாக உருவெடுத்து உலகுக்கு காட்ட விரும்பினோம். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இதுபோன்ற சாதிப்பதை எதிர்நோக்கி உள்ளோம். பொருளாதாரப் பிரச்சினைகளால் கடினமான நிலைமையில் சமாளித்து வரும் இலங்கை மக்களின் முகத்தில் இந்த வெற்றி கொஞ்சம் புன்னகை தரும் என்று நம்புகிறோம்" என கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News