ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடக்கம் - இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்பு!
இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா உட்பட ஆறு அணிகள் பங்கேற்க உள்ளது.
ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இரண்டு ஆடுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி, தற்போது அரசியல் பிரச்சினையில் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளி வைக்கப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு இந்த தொடர் நடத்தப்படவில்லை. கடைசியாக இந்த தொடர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வங்காளத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. அந்த வகையில் தற்போது 15 வது ஆசிய கோப்பை தொடர் இன்று முதல் நடக்க இருக்கிறது.
முதலில் இலங்கையில் நடத்த திட்டமிட்டப்பட்டு இருந்தது. ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் காரணமாக, இங்கு போட்டி நடத்த இயலாது என்று கூறிவிட்டது. இலங்கைய அடுத்த அங்கு நடைபெற இருந்த 15 வது ஆசிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதன்படி இங்கு போட்டி துபாய் மற்றும் ஜார்ஜானியாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஆறு அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. நடப்புச் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகியவை அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்காளம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவிலும் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தல ஒருமுறை மோத வேண்டும். லிக் சுற்றில் இரண்டு பிரிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் சூப்பர் அணிகள் நான்காம் சுற்றுக்க தகுதி பெறும்.
எனவே சூப்பர் நான்காம் சுற்றுக்கு வரும் நான்கு அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி முடிவில் டாப் 2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிற்கு அடியெடுத்து வைக்கும். ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுமார் ஏழு முறை கோப்பைகளை வென்றும் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனவே தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளின் ஒரு அணி கோப்பையை வெல்லும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு ஆகும்.
Input & Image courtesy:News