ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம் வென்றவரை வீழ்த்தி இந்திய வீரர் அதானு தாஸ் சாதனை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் திபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். இதனால் அவர்கள் வெளியேறிய நிலையில், தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

Update: 2021-07-29 12:37 GMT

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்ற தென்கொரியாவை சேர்ந்த ஓ ஜின்னை இந்தியாவை சேர்ந்த அதானு தாஸ் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் திபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். இதனால் அவர்கள் வெளியேறிய நிலையில், தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். 

இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அதானு தாஸ் மற்றம் ஒலிம்பிக்கில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவருமான தென்கொரியாவை சேர்ந்த ஓ ஜின் ஹைக்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 65 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார். இதன் காரணமாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அதானு தாஸ் முன்னேறி சென்றுள்ளார்.

Similar News