சென்னை, மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகள் துவங்குகிறது. மதியம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக 900 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.
இந்நிலையில், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் விழாவில் பங்கேற்காமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Source: Maalaimalar
Image Courtesy: News 18