மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.!

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்.

Update: 2021-07-06 06:56 GMT

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதில் 120க்கும் மேற்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களின் நாட்டின் பெருமையை உலகிற்கு காட்ட உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் வீரர், வீராங்கணைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி படைத்து வருகின்றனர்.


இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவரும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி படைத்துள்ளார். இவர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனது பாட்டியின் அரடணைப்பில் தனது கனவை நிறைவேற்ற உள்ளார்.


இவர் ஓட்டப்பந்தயத்தில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றிகளை குவித்துள்ளார். இதனால் தற்போது ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பள்ளிப்படிப்பின் போதே ஒட்டப்பந்தயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளார். இவர் ஜப்பான் தலைநர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி படைத்துள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Similar News