முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 274 ரன்கள் சேர்ப்பு!

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 274 ரன்கள் சேர்ப்பு!

Update: 2021-01-15 15:34 GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்ளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் பல மாற்றங்களுடன் நான்காவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளுகிறது.

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாசிங்டன் சுந்தர் இருவரும் அறிமுகமாகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும் மார்கஸ் ஹரிஸ் 5  ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் லபுசானே மற்றும் ஸ்மித் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

ஸ்மித் 36 ரன்னில் தமிழகத்தை சேரந்த வாசிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து வேட் களம் இறங்கிய 45 ரன்கள் அடித்த நிலையில் நடராஜன் பந்தில் அவுட் ஆக தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை வீழத்தினார்.

நிலைத்து விளையாடிய லபுசானே 108 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலியா கேப்டன் பெயின் மற்றும் கிரின் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பெயின் 38 ரன்களும் கிரின் 28 ரன்களும் அடித்து  களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 274/5 ரன்கள் சேர்த்தது. 

Similar News