விராட் கோலியா அவர் ரொம்ப பயங்கரமானவரு.. ஆஸ்திரேலிய வீரர் கூறியது என்ன?

விராட் கோலி ரொம்ப பயங்கரமானவர் என்று ஆஸ்திரேலிய வீரர் கூறி இருக்கிறார்.

Update: 2023-06-05 03:49 GMT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அணி வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் தான் இருக்கிறது. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தால், அது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும்.


இந்த நிலையில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினாலே இந்திய அணி தோற்றுவிடும் என்ற இமேஜ் மற்ற அணி ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த நிலையில், விராட் கோலி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று ஆஸ்திரேலிய வீரர் ஒருவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஒரு வரியில் பதிலளித்திருக்கிறார்கள். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் எங்களுக்கு எதிராக விளையாட மிகவும் ஆசைப்படுவார் என்று கூறினார்.


இதேபோன்று கேப்டன் பாட் கமின்ஸ் கூறுகையில், சவாலுக்கு எப்போதும் தயாராக இருப்பார் என்று பாராட்டினார். மேலும் பல்வேறு ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலி பற்றி அதிரடியான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். குறிப்பாக அவர் விளையாட்டு களத்தில் விளையாடுவதை பார்க்கும் பொழுது மிகவும் பயங்கரமாக இருக்கும். குறிப்பாக அவர் வெற்றிப்பட வேண்டும் என்று நோக்கில் பயங்கரமாக விளையாடி வருவார் என்று கூறி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News