ஆஷஸ் டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 26) நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இன்று தொடங்கி நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு சுருண்டு விட்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 28 ரன்கள் எடுத்தார்.
மேலும், ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலனட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தார். கேமரூன் கிரீன் 1 விக்கெட்டை எடுத்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஷ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy:The Guardian