இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிலையான ஆட்டம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிலையான ஆட்டம்!

Update: 2021-01-07 18:12 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் வில் புஸ்கோகி இருவரும் களம் இறங்கினர். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர் காயம் காரணமாக விளையாடாத நிலையில் இந்த போட்டியில் தான் களம் இறங்கினார். பெரிதும் எதர்பார்க்கப்பட்ட வார்னர் 5 ரன்னில் சீராஜ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய லாபுஸ்சானே நிலைத்து விளையாட புஸ்கோகி என்ற புதிய வீரர் இன்றைய போட்டியில் அறிமுக ஆனார். நிலைத்து விளையாடி புஸ்கோகி 62 ரன்னில் அவுட் ஆகினார்.

இதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்மித் மற்றும் லபுசானே இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு ரன்களை சேர்த்தனர். இன்றைய போட்டியின் போது அடிக்கடி மழை குறிக்கிட்டததால் ஆட்டம் தடைப்பட்டது. முதல் நாள் முடிவில் 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 166-2 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்தது. ஸ்மித் 31  ரன்கள் அடித்தார்.  

Similar News