ஆஸ்திரேலியா வீரர்கள் நான்காவது டெஸ்ட் போட்டியில் கவனமாக இருக்க வேண்டும் பிரட் லீ எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா வீரர்கள் நான்காவது டெஸ்ட் போட்டியில் கவனமாக இருக்க வேண்டும் பிரட் லீ எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் நாளை உள்ள துவங்க உள்ள நிலையில், இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல முடியுமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இது குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி குறித்தும், நடப்பு டெஸ்ட் தொடர் குறித்தும் பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ, இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரட் லீ பேசுகையில, “பிரிஸ்பேன் மைதானத்தில் இதுவரை ஆஸ்திரேலிய அணியை கையே ஓங்கி இருந்திருக்கிறது என்பதால் மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துவிடும் என கருதக்கூடாது. இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை வென்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
முக்கிய பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை கொடுக்கும் என்று கருதுகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் மிக சிறந்த பார்மில் உள்ளனர், ஆனால் ஒரு சில விசயங்கள் போட்டியை அப்படியே இந்தியா பக்கம் திருப்பிவிடும். ஆஸ்திரேலிய வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.