இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி!

இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி!

Update: 2021-01-10 16:24 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் புஸ்கோகி 62 ரன்கள் அடித்தார் பின்னர் லபுசானே 91 ரன்களும் ஸ்டிவ் ஸ்மித் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் வீளாசினார்.

131 ரன்கள் அடித்த ஸ்மித் அவுட் ஆக ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் புஜாரா மற்றும் சுக்மன் கில் மட்டும் அரைசதம் வீளாசினார். இந்திய அணி முதலில் இன்னிங்ஸில் 244 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் லபுசானே 73 ரன்களும் ஸ்மித் 81 ரன்களும் அடித்தனர். கிரின்ஸ் 84 ரன்கள் சேர்த்தனர். 

ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணி 400+ ரன்கள் வைத்து இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 52 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். பின்னர் சுக்மன் கில் 31 ரன்கள் அடித்து அவுட் ஆக இந்திய அணி 309 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படும் நிலையில் நான்காவது நாள் முடிவுக்கு வந்தது. 

Similar News