ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி.. சச்சின் டெண்டுல்கர் புகழாரம்.!
ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி.. சச்சின் டெண்டுல்கர் புகழாரம்.!
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, சமனில் முடிந்தது. கடைசி நாளான இன்று, விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களையும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களையும் எடுத்து, போட்டி சமனில் முடிய காரணமாய் இருந்தனர்.
இந்நிலையில், இன்று நடந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர்களை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.
குறிப்பாக பண்ட், புஜாரா, அஷ்வின், விஹாரி ஆகிய வீரர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். அதே போல் எந்த அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் போட்டிக்கான அறம் அதிகமாக இருந்தது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.