ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட்: டேவிட் வார்னர், லாபஸ்சேன் அசத்தல்!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது. பகல், இரவு போட்டியாக இன்று நடைபெறும் நிலையில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.;

Update: 2021-12-16 14:03 GMT
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட்: டேவிட் வார்னர், லாபஸ்சேன் அசத்தல்!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது. பகல், இரவு போட்டியாக இன்று நடைபெறும் நிலையில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் உள்ளிட்டோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனம். இதில் மார்கஸ் ஹாரிஸ் மட்டும் 3 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்து வார்னர் உடன் லாபஸ்சேன் ஜோடியாக இணைந்தார். இவர்கள் மிகவும் சாதுர்யமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் விக்கெட் செய்ய முடியவில்லை என்பதும் ஆட்டத்தின் சுவாரஸ்யம்.

இதில் டேவிட் வார்னர் 108 பந்தில் அரைசதம் எடுத்தார். லாபஸ்சேன் 156 பந்தில் அரைசதம் அடித்தார். தேனீர் இடைவேளை வரைக்கும் ஆஸ்திரேலியா 53 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Source,Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News