விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு.. பின்தங்கிய கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..
தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.
2023-24-ம் ஆண்டுக்கு தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டலம் வரவேற்று இருக்கிறது. இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டலம் இளைஞர்களுக்கு குறிப்பாக, பின்தங்கிய கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் விளையாட்டை மேம்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், 2023-24-ம் ஆண்டுக்கு பல்வேறு விளையாட்டுகளில் தகுதிவாய்ந்த, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டலம் வரவேற்றுள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது மாணவர் அல்லாத 15-18, 18-24 வயதுப் பிரிவினர் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வதற்கு கீழ்க்காணும் விளையாட்டுப் பிரிவுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும். கால்பந்து (ஆடவர்), ஹாக்கி (ஆடவர்), கிரிக்கெட் (ஆடவர்), டேபிள் டென்னிஸ் (ஆடவர் & மகளிர்) பேட்மிண்டன் (ஆடவர் & மகளிர், பளுதூக்குதல் (ஆடவர்), தடகளப்போட்டிகள் (ஆடவர் & மகளிர்) நீச்சல் (ஆடவர் & மகளிர்). விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களை www.fci.gov.in இணையதளத்தில் அறியலாம் .
Input & Image courtesy: News