டி20 உலகக்கோப்பை: அதிகமான ரன் குவித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம்!
கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி துபாயில் தொடங்கிய டி20 உலக கோப்பை போட்டி நேற்று முடிவு பெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.

இதனிடையே இந்த முறை இந்தியா கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பாதியிலேயே இந்தியா வெளியேறியது. இதன் பின்னர் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அதிக ரன் சேர்த்தவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த டேவிட் வார்னர் 289 ரன்களுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அணியின் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் 281 ரன்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi