2வது டெஸ்ட்: வங்காளதேசத்திற்கு 413 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காள தேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மேலும், வங்காளதேசம் சார்பாக தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், காலித் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனை தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 236 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து டிக்ளோர் செய்தது. இதனை தொடர்ந்து 413 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் களம் இறங்கியது. 3ம் நாள் முடிவின்போது வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை மட்டும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Maalaimalar